/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில இரண்டாம் இடம் பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
/
மாநில இரண்டாம் இடம் பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
மாநில இரண்டாம் இடம் பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
மாநில இரண்டாம் இடம் பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
ADDED : ஆக 12, 2025 11:17 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி போதை பொருள் எதிர்ப்பு தன்னார்வ குழுக்களின் செயல்பாட்டிற்கான மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தன்னார்வ குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.
சென்னையில் உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில் மாநில அளவிலான சிறந்த போதை பொருள் எதிர்ப்பு தன்னார்வ குழுக்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி சிறந்த போதை பொருள் எதிர்ப்பு தன்னார்வ குழுக்களின் செயல்பாட்டிற்கான இரண்டாம் பரிசு பெற்றதற்கான சான்றிதழ் துணை முதல்வர் உதயநிதி உட்பட அரசு அதிகாரிகள் வழங்கினர்.
மேலும் ரூ.75 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்று ராமநாத புரம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் ராகுல், மனோஜ்குமார், விகாஷ்கண்ணா, கணேஷ் பிரபாகரன், விகாஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலரும் பாராட்டினர்.