/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கடையை உடைத்து பணம், ஜி.பி.எஸ்.,கருவிகள் திருட்டு; முகமூடி கொள்ளையர் கைவரிசை

ADDED : அக் 12, 2025 11:20 PM
ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் முகமூடி கொள்ளையர்கள் கடையை உடைத்து ரூ.40 ஆயிரம், ஆறு ஜி.பி.எஸ்., கருவிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
ராமேஸ்வரத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். சில மாதங்களாக இலங்கை கடற்படை கெடுபிடி க்கு பயந்து 50 சதவீதம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வீடுகளில் முடங்கியுள்ளனர்.
சில மீனவ இளைஞர்கள் வேலை தேடி கன்னியாகுமரி, கேரளா சென்று விட்டனர். இதனால் ராமேஸ்வரம் கடற்கரை மீனவர்கள் அதிக நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.
இச்சூழலை பயன்படுத்தி நேற்றிரவு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ராமேஸ்வரம் துறைமுக வீதி கடற்கரையில் உள்ள வின்னரசு கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம், மீனவர்கள் வைத்து சென்ற படகிற்கு திசைகாட்டும் 6 ஜி.பி.எஸ்., கருவிகளை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம்.
இக்கொள்ளை கடை முன்பு உள்ள சி.சி.டிவி., கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் ஏற்றி இருந்த சில படகுகளில் இன்ஜின் புரொப்பல்லரில் (இலை) பொருத்தி உள்ள வெண்கல நட்டுகளை திருடர்கள் திருடி சென்றனர். தொடர்ந்து கடற்கரையில் கைவரிசை காட்டி வரும் கொள்ளையர்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.