/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் நாளை மாசி மகா சிவராத்திரி நாள் முழுவதும் நடைதிறப்பு
/
ராமேஸ்வரத்தில் நாளை மாசி மகா சிவராத்திரி நாள் முழுவதும் நடைதிறப்பு
ராமேஸ்வரத்தில் நாளை மாசி மகா சிவராத்திரி நாள் முழுவதும் நடைதிறப்பு
ராமேஸ்வரத்தில் நாளை மாசி மகா சிவராத்திரி நாள் முழுவதும் நடைதிறப்பு
ADDED : மார் 07, 2024 02:14 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை(மார்ச் 8) மாசி மகா சிவராத்திரி விழா நடக்கவுள்ளதால் அன்று முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
மார்ச் 1ல் இக்கோயிலில் சிவராத்திரி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான நாளை மாசி சிவராத்திரி விழா கோயிலில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கோயில் சுவாமி சன்னதியில் அன்று முழுவதும் கங்கை நீர் அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கிறது.
இதில் வட, தென் மாநில பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்வர். அன்று முழுவதும் கோயில் நடை திறந்து இருக்கும் என்பதால் பக்தர்கள் பகல், இரவு முழுவதும் தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை இணை கமிஷனர் சிவராம்குமார், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.