ADDED : மார் 11, 2024 11:17 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம், - ராமநாதபுரம் மாவட்ட கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் பணியாளர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தினர்.
பா.ம.க., கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் ராசிக் தலைமையில் ஆர்.எஸ். மங்கலம் வட்டார கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 2012 முதல் கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் பணியாளர்களாக பணிபுரிகிறோம். இந்நிலையில் ஆட்குறைப்பு என்ற பெயரில் எவ்வித முன் அறிவிப்பு இல்லாமல் பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் வருமானம் இன்றி சிரமப்படுகிறோம்.
எனவே மீண்டும் பணி வழங்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
