/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி உத்தரவை மீறி பாம்பன் பாலம் ஓரத்தில் இறைச்சி கழிவுகள்
/
ஊராட்சி உத்தரவை மீறி பாம்பன் பாலம் ஓரத்தில் இறைச்சி கழிவுகள்
ஊராட்சி உத்தரவை மீறி பாம்பன் பாலம் ஓரத்தில் இறைச்சி கழிவுகள்
ஊராட்சி உத்தரவை மீறி பாம்பன் பாலம் ஓரத்தில் இறைச்சி கழிவுகள்
ADDED : டிச 01, 2024 07:21 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் ஊராட்சி உத்தரவை மீறி தேசிய நெடுஞ்சாலை பாலம் ஓரத்தில் வியாபாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தின் நுழைவு வாயில் ஓரத்தில் பாம்பனில் கோழி, மாட்டு இறைச்சி விற்கும் வியாபாரிகள் கழிவுகளை கொட்டினர். இதனால் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் முகம் சுளித்தபடி சென்றனர்.
இதையடுத்து பாம்பன் ஊராட்சி தலைவர் அகிலா பேட்ரிக், இறைச்சி கழிவை கொட்டும் வியாபாரிகள் மீது அபராதம் விதித்து போலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரித்தார். இதனை பொருட்படுத்தாத ஒருசில வியாபாரிகள் தற்போதும் பாலத்தின் பக்கவாட்டில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுகளை உட்கொள்ளும் பருந்துகள் போட்டா போட்டியில் வானில் வட்டமிடுவதால் பாலத்தில் செல்லும் வாகனங்கள், டூவீலர்கள் மீது மோதுகிறது. இதனால் மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இறைச்சி கழிவுகளை கொட்டும் வியாபாரிகளை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.