/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் படைவீரர்களுக்கு நாளை மருத்துவ முகாம்
/
முன்னாள் படைவீரர்களுக்கு நாளை மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 31, 2025 10:59 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர் களுக்கு மண்டபம் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஆக.,2ல்) சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்த வர்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வாயிலாக புற்றுநோய், பக்கவாதம், மனவளர்ச்சி குன்றிய சிறார்கள், கண்பார்வையற்றோர், மாற்று திறனாளிகளுக்கான நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நிதி யுதவிகள் வழங்கப்படுகிறது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பொது மருத்துவ முகாம் நாளை மண்டபம் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இம்முகாமில் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.