நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் மாவட்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. பரமக்குடி நகராட்சி, பாண்டியூர், மேலப்பார்த்திபனுார் ஆகிய இடங்களில் நடந்தது. பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, இன்ஜினியர் சுரேஷ், பி.டி.ஓ.,க்கள் பிரியதர்ஷினி முத்துராமலிங்கம் மற்றும் துறை அதிகாரிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இன்று ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.