ADDED : நவ 30, 2025 03:52 AM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில், இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.
செயலாளர் ஜான் பொன்னையா, முன்னாள் தலைவர்கள் கந்தசாமி, சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மூத்த உறுப்பினர் டாக்டர் ராஜா முகமது மருத்துவ முகாமை துவங்கி வைத்து மக்களுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கினார்.
சங்க முன்னாள் தலைவர் கருணாகரன், முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
