ADDED : செப் 24, 2026 01:03 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஜோதி தலைமை வகித்தார்.
செயலாளர் கல்பனா, பொருளாளர் சேதுபதி முன்னிலை வகித்தனர். முகாமில், இதயம் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
டாக்டர்கள் சேகர் வேளாணி, ரேவதி சேகர் ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
