/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பொதுக்கழிப்பறை இல்லாமல் தவிப்பு
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பொதுக்கழிப்பறை இல்லாமல் தவிப்பு
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பொதுக்கழிப்பறை இல்லாமல் தவிப்பு
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பொதுக்கழிப்பறை இல்லாமல் தவிப்பு
ADDED : பிப் 17, 2025 05:02 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால்நோயாளிகளுடன் இருப்போர், பார்க்க வருவோர் தவிக்கின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமைனையில் பொதுக்கழிப்பறை இல்லாததால் மருத்துவமனைக்கு வருபவர்கள் திறந்த வெளிகளில் இயற்கை உபாதை கழிக்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக தினமும் நுாற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் காத்திருக்கின்றனர். இவர்கள் கழிப்பறை இல்லாததால் அவதிப்படுகின்றனர்.மருத்துவமனை நிர்வாகம் பொதுக்கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.