/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நோய் பரப்பும் மையமாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
/
நோய் பரப்பும் மையமாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
நோய் பரப்பும் மையமாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
நோய் பரப்பும் மையமாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
ADDED : மார் 18, 2025 10:42 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கழிவு நீர் தேங்கி நோய் பரப்பும் மையமாக செயல்படுகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பழைய வெளி நோயாளிகள் பிரிவு பகுதியில் நுழைவு வாயிலில் கழிவு நீர் கசிந்து தேங்குகிறது. அதன் அருகே செப்டிக் டேங்க் மூடிகள் உடைந்து அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நோய்கள் குணமாக வருகின்றனர். அரசு மருத்துவமனை நிர்வாகமோ நோயாளிகளுக்கு கூடுதல் நோய் பரப்பும் நிலையமாக மாறி வருகிறது. இது குறித்து அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.