/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் மக்களை தேடி மருத்துவத் திட்டம்
/
நயினார்கோவிலில் மக்களை தேடி மருத்துவத் திட்டம்
ADDED : செப் 22, 2024 05:38 AM

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவிலில் முதல்வரின் மக்களை தேடிமருத்துவ திட்டத்தில் பயனடைந்த மூதாட்டி வீட்டிற்கு சென்று கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் விசாரித்தார்.
இத்திட்டத்தில் மக்களின் வீட்டிற்கு சென்று தொற்று நோய் பரிசோதனை, மருந்து வழங்குதல், இயன்முறை சிகிச்சை, வலி நிவாரணி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 45 வயதிற்கும் மேற்பட்ட இயலாமையில் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய்களுக்கான மருந்துகள் களப்பணியாளர்களால் வழங்கப்படுகிறது.
மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், இயன் முறை மருத்துவர்கள், செவிலியர்என பணியாற்றி வருகின்றனர்.
இதன்படி நயினார்கோவில் ஒன்றியம் கங்கைகொண்டான் கிராமத்தில் முத்தம்மாள் 60, இரண்டு ஆண்டாக சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவரின் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வருவதாக மூதாட்டி நம்பிக்கை தெரிவித்தார்.