/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் அருகே கிணற்றில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்
/
முதுகுளத்துார் அருகே கிணற்றில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்
முதுகுளத்துார் அருகே கிணற்றில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்
முதுகுளத்துார் அருகே கிணற்றில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்
ADDED : ஜன 09, 2025 06:46 AM

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தில் கண்மாய் அருகில் உள்ள கிணற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கண்மாய் அருகே பழமையான கிணறு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பயன்பாடின்றி உள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாதவர்கள் இரவு நேரத்தில் ஊசி, மாத்திரை, மருந்து, குளுக்கோஸ் பாட்டில் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கிணற்றில் கொட்டிச் சென்றுள்ளனர். தற்போது கிணற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் இவை மிதக்கிறது. மருத்துவ கழிவுகளை வீசியது யார் என போலீசார் விசாரிக்க இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.