/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
கமுதியில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கமுதியில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கமுதியில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : பிப் 21, 2024 05:22 AM

கமுதி : கமுதியில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் இன்று கோலாகலமாக நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், கல் மண்டபங்கள், சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுள்ளது.
இன்று(பிப்.21) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கும்பாபிஷேகம் துவக்க விழாவாக யாகசாலை பூஜைகள் துவக்கப்பட்டது.
பிப்.15ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி துவங்கப்பட்டு தொடர்ந்து நவக்கிரக ஹோமம், தீப லெட்சுமி பூஜை, மிருத்சங்கிரஹனம், பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷனம், கும்ப அலங்காரம், முதற்கால, இரண்டாம் கால, மூன்றாம் கால, நான்காம் கால, ஜந்தாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது.
இன்று காலை 9:00 மணிக்கு மேல் விமானம், ராஜகோபுரம், மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தினமும் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழு தலைவர் காதர்பாட்ஷா தலைமையில் செயலாளர்கள் நாராயணமூர்த்தி, பாஸ்கரபூபதி, பொருளாளர்கள் கிருஷ்ணன், ராஜாராம், துணைத்தலைவர்கள் போஸ் தேவர், வாசுதேவன், ராமமூர்த்தி மற்றும் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

