/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மெகா பள்ளம்: சுற்றுலா வாகனங்களுக்கு விபத்து அபாயம்

ADDED : ஜன 09, 2025 05:07 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இரு மாதங்களாக மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரத்தில் ரூ.52.60 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி 2020ல் துவங்கியது. இதற்காக கோயில் நான்கு ரதவீதி, மார்க்கெட் தெரு, கிழக்கு தெரு, ரயில்வே பீடர் ரோடு, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோட்டின் நடுவில் பள்ளம் தோண்டி குழாய் பதித்து திடக்கழிவுநீர் செல்ல தொட்டி அமைத்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் இப்பணி இன்று வரை முழுமை பெறாமல் மந்தகதியில் நடக்கிறது.
இந்நிலையில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வேர்க்கோடு பகுதியில் இரு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தொட்டி மூடியை புதுப்பித்து சிமென்ட் கலவை பூசினர். இதில் இரு இடங்களில் மூடியும், சிமென்ட் பூச்சும் உடைந்து மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய மக்கள் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால் தனுஷ்கோடி செல்லும் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் பள்ளத்தில் சிக்கி விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. மெகா பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.