நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: நா.த.க., முதுகுளத்துார் சட்டசபை தொகுதி சார்பில் கடலாடி பஸ் ஸ்டாண்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. கட்சியின் கொள்கைகள் மற்றும் ஆற்றி வரும் பல்வேறு பணிகள் குறித்தும் அப் பகுதி மக்களிடம் விளக்கப்பட்டது.
நா.த.க., மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நரிப்பையூர் சிவா, குமரேச பாண்டியன், ஜான் போஸ்கோ, பால முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

