நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி; சாயல்குடி மூக்கையூர் ரோடு சந்திப்பில் இரட்டை மலை சீனிவாசனின் 80வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மக்கள் தேசம் கட்சியின் மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். த.மு.மு.க., நகர் தலைவர் ஜாபர் அலி, சம்சுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.