/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜன 28, 2025 05:12 AM
தொண்டி: தொண்டி அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் த.மு.மு.க., வினர் முயற்சியால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடலுார் துறைமுகம் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் ெஷரிப் மகள் சர்மிளா 23. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சர்மிளா 2023 டிச.27 ல் மாயமானார். சர்மிளா பாட்டி சாரம்பி புகாரில் கடலுார் துறைமுக போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் ஓராண்டிற்கு முன்பு ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் சர்மிளா நின்று கொண்டிருந்தார்.
அவரை பார்த்த சிலர் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரத்திற்கு தெரிவித்தனர். அவர் சிறுமியை மீட்டு தொண்டியில் உள்ள அன்பாலயா அறக்கட்டளை சார்பில் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்தார். அங்கு அவருக்கு நிர்வாகிகள் உணவு, உடை வழங்கி கவனித்து வந்தனர்.
இந்நிலையில் தொண்டி த.மு.மு.க., நிர்வாகிகள் விசாரணை செய்து சர்மிளாவின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டனர். அவரது புகைப்படம் பெற்றோருக்கு அனுப்பப்பட்டது. நேற்று காலை சர்மிளாவின் பெற்றோர் வந்தனர்.
அவர்களை த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா, உண்டுஉறைவிடப் பள்ளி தாளாளர் சவேரியார் மற்றும் த.மு.மு.க., நிர்வாகிகள் பரக்கத்தலி, அப்துல்லாஜாசிர் ஆகியோர் அழைத்து சென்று அன்பாலயா பள்ளியில் இருந்த சர்மிளாவை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

