/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் திரிந்த மனநலம் பாதித்தபெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
/
ரோட்டில் திரிந்த மனநலம் பாதித்தபெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
ரோட்டில் திரிந்த மனநலம் பாதித்தபெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
ரோட்டில் திரிந்த மனநலம் பாதித்தபெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
ADDED : டிச 14, 2024 05:54 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில்ஆதரவற்ற நிலையில் ரோட்டில்சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீசார் மீட்டு மனநலக் காப்பகத்தில் சேர்த்தனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீட்டில் தனியாக உள்ள முதியவர்கள் மற்றும் ரோடு, தெருக்களில் திரியும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் ரோட்டோரத்தில் பூட்டிய கடையில் படுத்திருந்த பெண்ணை ராமநாதபுரம் நகர் போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர் பெயர் தேவி 50. சேலத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.
இவர் 15 நாட்களுக்கும் மேலாக ராமநாதபுரத்தில் பாதுகாப்பின்றி சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை மீட்டு புத்தேந்தல் செஞ்சோலை மனநல காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.