/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறிமுகம் இல்லாதவரிடம் அலைபேசி கொடுப்பதால் கையிருப்பு காலியாகும் வணிகர் சங்கம் விழிப்புணர்வு
/
அறிமுகம் இல்லாதவரிடம் அலைபேசி கொடுப்பதால் கையிருப்பு காலியாகும் வணிகர் சங்கம் விழிப்புணர்வு
அறிமுகம் இல்லாதவரிடம் அலைபேசி கொடுப்பதால் கையிருப்பு காலியாகும் வணிகர் சங்கம் விழிப்புணர்வு
அறிமுகம் இல்லாதவரிடம் அலைபேசி கொடுப்பதால் கையிருப்பு காலியாகும் வணிகர் சங்கம் விழிப்புணர்வு
ADDED : ஜன 19, 2025 04:53 AM
சாயல்குடி: அலைபேசியில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்தும் அவற்றின் செட்டிங்கை மாற்றியும் வங்கிக் கையிருப்பை காலி செய்யும் புது மோசடி நடப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் சாயல்குடி எம்.பெத்தராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மோசடி நபர்கள் இவ்வாறு செயல்பட்டு ஒன்றும் அறியாத பொது மக்களின் வங்கி பணத்தை சுரண்டுகின்றனர். அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் அவசர அழைப்புக்காக ஒருவரிடம் அவரது அலைபேசியை கேட்கிறார். போன் அழைப்புக்கு தற்போது தனியாக கட்டணம் வசூலிக்கப்படாததால் பலர் தங்கள் அலைபேசிகளை அறிமுகம் இல்லாதவர்களிடம் தருகின்றனர்.
அத்தகைய நபர் அலைபேசியை வாங்கியதும் போன் எண்ணை டயல் செய்வது போல் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்கிறார். அல்லது ஏற்கனவே உள்ள செயலியை திறந்து பார்க்கிறார். அல்லது போன் செட்டிங்கை உடனடியாக மாற்றி விடுகிறார்.
இதன்பின் அந்த அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்., தகவல்கள் வேறு எண் கொண்ட அலைபேசிக்கு செல்கிறது.
தனிப்பட்ட தகவல்களும் திருடப்படுகின்றன. வங்கியில் இருந்து வரும் ஓ.டி.பி., எண்களும் மோசடி நபர்களின் அலைபேசிக்கு சென்று விடும்.
அதன்பின் அலைபேசியை கொடுத்த அப்பாவிகளின் வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு பணம் முழுவதும் காலியாகி விடுகிறது. இதனால் அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது அவசர அழைப்புக்காக அலைபேசியை கேட்டால் அவரிடம் போன் நம்பரை கேட்டு நீங்களே டயல் செய்து ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து அந்த எண்ணில் அந்த நபரை பேச வைப்பது பாதுகாப்பானது.
இதுகுறித்து வணிகர் சங்கத்தின் சார்பில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

