ADDED : ஜன 18, 2025 06:47 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அரண்மனை பகுதியில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வண்டிக்காரத்தெருவில் மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர், கிராமப்புறங்களில் எம்.ஜி.ஆர்., புகைப்படங்கள் வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.
*கீழக்கரை நகர் அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் எம்.எஸ்.ஜகுபர் உசேன் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நகர் பொருளாளர் அரி நாராயணன் கொடியேற்றினார். எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஏர்வாடியில் சாயல்குடி ஒன்றிய அவைத்தலைவர் செய்யது அகமது தலைமை வகித்தார். ஏர்வாடி கிளைச் செயலாளர் அஜ்முல் ரகுமான் முன்னிலை வகித்தார். மலைராஜ், லெவ்வை கனி, ஷாஜகான், பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலாடியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சியில் உள்ள துாய்மைப் பணியாளர்களுக்கு கேசரி வழங்கப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.
*ஆர்.எஸ்.மங்கலத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் விழா நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமலை, நகர் செயலாளர் ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முனியசாமி எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். பொதுக்குழு உறுப்பினர் ராஜபாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*கமுதி பகுதியில் எம்.ஜி.ஆர் படத்திற்கு நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், அவைத்தலைவர் சேகரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட ஜெ., பேரவை செந்துாரான் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் படத்திற்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் எம்.பி., தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலாளர்கள் சுந்தரபாண்டியன், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.