ADDED : மார் 31, 2026 06:13 PM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை ஜோதி தலைமையில் நடந்தது. தொழிலதிபர் சித்திக், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கந்தசாமி, சுப்பிரமணியன், கருணாகரன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சாந்தி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் சேர்க்கை வலியுறுத்தப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் சசிகுமார், ஆசிரியர்கள் ஆரோக்கியசாமி, தாமஸ், மகேஸ்வரி, கோமதி, ஜனனி, பள்ளி மேலாண்மை குழு தலைவி சசிகலா, துணைத் தலைவி கோமதி உட்பட முன்னாள் மாணவர்களும், பெற்றோரும் திரளாக கலந்து கொண்டனர்.
