
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே காந்தகுளத்து முனியப்ப சுவாமி, காளீஸ்வரி அம்மன் கோயில் 58ம் ஆண்டு பால்குட விழா நடந்தது.
நேற்று காலை காட்டுப்பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், இளநீர் காவடி, அக்னிச்சட்டி வேல் குத்தி பக்தர்கள் புறப்பட்டனர். ஓட்டப்பாலம், பாரதிநகர், ஐந்துமுனை, முதுகுளத்துார் ரோடு வழியாக கோயிலை அடைந்தனர். அங்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.