UPDATED : அக் 08, 2026 12:05 AM
ADDED : அக் 08, 2026 12:02 AM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே நரசிங்கம்பட்டி பாதாள காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடக்கிறது. காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். பின் அம்மனுக்கு பாலபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி,கோட்டைமேடு பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
