ADDED : ஆக 08, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர் சித்தி விநாயகர், லலிதா முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் 25ம் ஆண்டு முளைப்பாரி, பால்குட உற் ஸவ விழா நடைபெற்றது.
முன்னதாக மூலவர் களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாகச் சென்று மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்திரா நகர் கிராம நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.