காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மதன் ராஜா
காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மதன் ராஜா
ADDED : செப் 22, 2026 05:01 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் மதன்ராஜா துவக்கி வைத்தார்.
சென்னையில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் விஜய் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். அமைச்சர் மதன் ராஜா துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் காமராஜர் காலை உணவுத் திட்டத்தில் 1120 பள்ளிகளில் 47,174 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஊரகப்பகுதியில் 1053 பள்ளிகளிலும், பள்ளி வளாகங்களில் 67 ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அரசின் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 370 பள்ளிகளில் 33,093 மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை உணவு வழங்கப்பட உள்ளது.
உணவுப் பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பெறப்படுகின்றன. இத்திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு சத்தான தரமான காலை உணவு வழங்கப்பட்டு பள்ளிக்கு வருவதை ஊக்குவிப்பதுடன், கல்வி கற்கும் திறனையும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
த.வெ.க., நிர்வாகி டாக்டர் முருகராஜா வரவேற்பு அளித்தார். சப்–கலெக்டர் வினோதினி, தாசில்தார் கோகுல்நாத், பி.டி.ஓ.,க்கள் பிரியதர்ஷினி, முருகானந்தவள்ளி, த.வெ.க., நிர்வாகி பூமிநாதன் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் இருந்தனர். பின் அமைச்சர் மதன்ராஜா பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் போது பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியர் பணியில் அமர்த்தவும், உடற்கல்வி பாடப்பிரிவு வேண்டு மென்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்.
–––
