அடிப்படை தேவைகள் சரி செய்ய நடவடிக்கை: அமைச்சர் மதன்ராஜா
அடிப்படை தேவைகள் சரி செய்ய நடவடிக்கை: அமைச்சர் மதன்ராஜா
UPDATED : ஜூன் 20, 2026 04:39 PM
ADDED : ஜூன் 20, 2026 04:20 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை தேவைகளை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் மதன்ராஜா ஆய்வு செய்தார். அரசினர் விருந்தினர் மாளிகையில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட தொழில் மையம் சிறு தொழில் துவங்குவதற்கு 4 பேருக்கு ரூ.6.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ராமநாதபுரம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:
முதல்வர் விஜய் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறேன். மக்களின் அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக செய்துக் கொடுக்கப்படும். தொழில் வளர்ச்சி, குடிநீர் பிரச்னை, மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக சரி செய்யப்படும்.
மாவட்டம் முழுவதும் கள ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
---
