/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி அமைச்சர் தொகுதியில் அவலம்
/
கடலாடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி அமைச்சர் தொகுதியில் அவலம்
கடலாடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி அமைச்சர் தொகுதியில் அவலம்
கடலாடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி அமைச்சர் தொகுதியில் அவலம்
ADDED : அக் 01, 2025 08:07 AM
கடலாடி : கடலாடி தாலுகா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலை உள்ளது.
கடலாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சாயல்குடி,
கடலாடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழக்கூடிய விபத்துகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கடலாடி தாலுகா மருத்துவமனைக்கு அதிகம் வருகின்றனர்.
இந்நி லையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை அதிகளவு உள்ளது.
கடலாடி தாலுகா மருத்துவமனை வளாகத்தில் தற்போது ரூ.2 கோடியே 25 லட்சத்தில் கூடுதலாக மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் கூறியதாவது:
விபத்துக்கள் மற்றும் பிற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் குளிர்சாதன பெட்டிகள் இல்லாத நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இதனால் இறந்தவர்களின் உடலை பாதுகாப்பதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் இருந்து வாடகைக்கு குளிர்சாதன பெட்டியை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
இங்கு 5 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் இரண்டு டாக்டர்கள் உள்ளனர்.
மீதமுள்ள டாக்டர்கள் பிற மருத்துவமனைக்கு மாற்று பணியாக சென்று விடுகின்றனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலை உள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை மருத்துவமனையில் குறைகளை சரி செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன் வர வேண்டும்.
இவ்விஷயத்தில் தொகுதி எம்.பி.,யின் பங்களிப்பு அவசியம். எனவே குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.