/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
/
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
ADDED : நவ 19, 2025 07:29 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருண் தலைமை வகித்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆணையத் துணைத்தலைவர் அப்துல் குத்துாஸ், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறுபான்மை அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மனுக்களை பெற்று மக்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜா, சிறுபான்மையின அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

