/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருக்கை வசதியற்ற நிழற்குடை ராமநாதபுரத்தில் பயணிகள் அவதி கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ.,

ADDED : பிப் 04, 2025 05:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் -மதுரை ரோட்டில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து பணிமனை பஸ் ஸ்டாப் நிழற்குடையில் இருக்கை வசதியின்றி பயணிகள் சிரமப்படும் நிலையில் எம்.எல்.ஏ., நிதியில் அமைக்கப்பட்ட நிழற்குடையை திறப்பு விழாவிற்கு பிறகு எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா கண்டு கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
ராமநாதபுரம் நகராட்சி 26வது வார்டிற்கு உட்பட்ட ராமநாதபுரம் - மதுரை ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை பஸ் ஸ்டாப்பில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 2022ல் ரூ.9.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இதனை எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் படங்களுடன் அவரது பெயரையும் எழுதி விளம்பரப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு நிழற்குடை தொடர்ந்து பராமரிக்கப்படாமல் தற்போது இருக்கைகள் இல்லாமல் உள்ளது.
இதனால் வெயில், மழைக்கு ஒதுங்கும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் அமர முடியாமல் பஸ்சிற்காக கால்கடுக்க நின்று சிரமப்படுகின்றனர்.
எம்.எல்.ஏ., பலமுறை மதுரை ரோட்டில் சென்று வருகிறார். கட்சி, அரசு விழாக்களில் ஆர்வம் காட்டும் எம்.எல்.ஏ., தனது சொந்தநிதியில் அமைக்கப்பட்ட நிழற்குடையை கண்டு கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.