/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எம்.எல்.ஏ., வருவதே இல்லை: மக்கள் குமுறல்
/
எம்.எல்.ஏ., வருவதே இல்லை: மக்கள் குமுறல்
ADDED : ஆக 11, 2025 10:06 PM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பஸ், குடிநீர், ரோடு வசதியின்றி மக்கள் சிரமப்படுகிறோம்.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம்(காங்.,) ஊர்பக்கம் வருவதே இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
திருவாடானை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா வரவணி ஊராட்சியை சேர்ந்த சாந்தமங்கலம், கூட்டாம்புளி கிராமங்களை சேர்ந்த 50க்குமேற்பட்டவர்கள் பஸ் வசதி, குடிநீர், ரோடு வசதியின்றி சிரமப்படுவதாக புகார் தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் கூறுகையில், சாந்தமங்கலம், கூட்டாம்புளி கிராமங்களில் 610 குடும்பங்கள் உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலத்திற்கு செல்வதற்கு பஸ் வசதியின்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். காவிரி குடிநீர் வருவது இல்லை. ஓட்டு வாங்கியதோடு சரி, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம்(காங்.,) இதுவரை ஊரு பக்கம் வரவேயில்லை. எங்களுக்கு கலெக்டர் அடிப்படை வசதி செய்துதர வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ., கருமாணிக்கத்திடம் கேட்ட போது, நான் எல்லா ஊருக்கும் சென்று கொண்டுதான் இருக்கிறேன். ஒரு மாதத்திற்குள் ரோடில்லா ஊர்களுக்கு ரோடு அமைக்க உள்ளோம். அவர்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். குடிநீர் பிரச்னையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பி.டி.ஓ.,க்களுடன் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

