/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலுக்குள் பக்தர்களிடம் அலைபேசி தாராளம்: பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : ஜூலை 12, 2025 11:29 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடையை மீறி பக்தர்கள் அலைபேசி பயன்படுத்துவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ராமேஸ்வரம் கோயில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2013 முதல் கோயிலுக்குள் அலைபேசி, கேமரா, எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் கோயில் கிழக்கு, மேற்கு நுழைவு வாசலில் போலீசார் பக்தர்களை சோதனை செய்த பின் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
இதனை துவக்கத்தில் பின்பற்றிய நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக போலீசார் கண்டுகொள்ளவில்லை.
இதனால் பக்தர்கள் எவ்வித அச்சமின்றி அலைபேசி, கேமராக்களை கோயில் 1, 2, 3ம் பிரகாரங்களில் ெஷல்பி, வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். மேலும் தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் சுவாமி, அம்மன் கருவறையை படம் எடுக்கின்றனர்.
இதனை கோயில் ஊழியர்கள், குருக்கள் அலைபேசியில் எடுத்த பதிவுகளை நீக்க வலியுறுத்தும் போது வாக்குவாதம் ஏற்படுகிறது.
மரபுகளை மீறி சுவாமி, அம்மன் கருவறை வீடியோ சமூக வலைதளத்தில் பரவும் அபாயம், சமூக விரோதிகளால் கோயில், பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.