ADDED : ஜன 11, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியில் மாநில அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி நடந்தது.சட்ட மாணவர்கள் சட்ட அறிவையும், நீதிமன்ற நடைமுறை அனுபவத்தையும் பெறுவதற்காக மாதிரி நீதிமன்ற போட்டி அவ்வப்போது நடத்தப்படும்
. ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியில் நடந்த போட்டியை ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 20 சட்டக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி இன்றுடன் (ஜன.,11) நிறைவடைகிறது.
