தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நவீன தொழில் நுட்பம் தேசிய கருத்தரங்கம்

நவீன தொழில் நுட்பம் தேசிய கருத்தரங்கம்

நவீன தொழில் நுட்பம் தேசிய கருத்தரங்கம்


ADDED : ஆக 29, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை–அறிவியல் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்ப துறையும், கணினி அறிவியல் துறையும் இணைந்து நவீன தொழில் நுட்பங்களும், அதன் பாதுகாப்பு மாற்றங்களும் என்ற தலைப்பில்  தேசிய அளவிலான  கருத்தரங்கம் நடந்தது. 

முதல்வர் பாலகிருஷ்ணன்  தலைமை வகித்தார்.  தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் வினோத்குமார் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா பல்கலை உயிரித் தகவலியல் துறை உதவி பேராசிரியர்  வித்யாவதி, அண்ணா பல்கலை கணினி– அறிவியல் பொறியில் துறையின் உதவிப்பேராசிரியர் முத்துமாரி பேசினர்.

தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா வாழ்த்து தெரிவித்தனர். 

ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். ஏற்பாடுகளை  கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா,  உதவிபேராசிரியர்கள் செய்தனர். கணினி அறிவியல் துறை தலைவர் விஜயசாரதி நன்றி கூறினார்.–––––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us