/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோடி நாளை ராமேஸ்வரம் வருகை சாதுக்களை சந்திக்க பா.ஜ., ஏற்பாடு மாநில துணை தலைவர் பேட்டி
/
மோடி நாளை ராமேஸ்வரம் வருகை சாதுக்களை சந்திக்க பா.ஜ., ஏற்பாடு மாநில துணை தலைவர் பேட்டி
மோடி நாளை ராமேஸ்வரம் வருகை சாதுக்களை சந்திக்க பா.ஜ., ஏற்பாடு மாநில துணை தலைவர் பேட்டி
மோடி நாளை ராமேஸ்வரம் வருகை சாதுக்களை சந்திக்க பா.ஜ., ஏற்பாடு மாநில துணை தலைவர் பேட்டி
ADDED : ஜன 19, 2024 04:40 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி நாளை (ஜன.20ல்) வருகிறார். அவருக்கு ஹெலிபேடு மைதானத்தில் இருந்து வரவேற்பு மற்றும் கோயில் அருகே ஆன்மிகப் பெரியவர்கள், சாதுக்கள், மடாதிபதிகளிடம் ஆசிபெற ஏற்பாடு செய்கிறோம் என பா.ஜ., மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
ஜன.22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் வருகிறார். நாளை (ஜன.20ல்) திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரிசனம் முடித்து ராமேஸ்வரத்திற்கு வரும் போது பா.ஜ., சார்பில் ஹெலிபேடு மைதானத்தில் இருந்து வரும் வழியில் வரவேற்பு அளிக்கப்படும்.
கோயிலில் தரிசனம் முடித்து வரும் போது ராமநாதபுரம் மாவட்ட ஆன்மிக பெரியோர், சாதுக்கள், சாமியார்கள், மடாதிபதிகளிடம் ஆசி பெற ஏற்பாடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிேஷகம் நடக்கிறது.
இதில், தி.மு.க., காங்., அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றனர். கும்பாபிேஷகத்திற்கு செல்ல வேண்டாம் என்ற அளவிற்கு ஹிந்துக்களுக்கு எதிராக பேசுகின்றனர். ஸ்ரீரங்கத்தில் இருந்து மோடியுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் வருகிறார். ராமேஸ்வரத்திலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்வதாக தகவல் வந்துள்ளது.
கிராமங்களில் கோயில்களை தேர்வு செய்து ஜன.22 ல் ராமர் கோயில் கும்பாபிேஷகத்தின் போது காலையில் சிறப்பு அபிேஷகம், அர்ச்சனை, 108 முறை ஸ்ரீராம ஜெயம் மந்திரம் உச்சரிக்கவும், கும்பாபிஷகத்தை பக்தர்கள் காண்பதற்கு எல்.இ.டி., திரையில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய உள்ளோம்.
வரும் லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட கட்சியினர், மக்கள் விரும்புகின்றனர் என்றார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உடனிருந்தார்.

