/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவன் கோயில்களில் சோமவார அபிஷேகம்
/
சிவன் கோயில்களில் சோமவார அபிஷேகம்
ADDED : நவ 26, 2024 04:59 AM

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவார அபிஷேகம் நடந்தது.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி நேற்று மாலை சிறப்பு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது.
பரமக்குடி விசாலாட்சி சந்திரசேகர சுவாமி கோயிலில் நடந்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். எமனேஸ்வரம் சொர்ண குஜாம்பிகை எமனேஸ்வரமுடையவர் கோயிலில் அபிஷேகம் நடந்தது.
நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி நாகநாத சுவாமி கோயிலில் நடந்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒவ்வொரு கார்த்திகை சோமவாரத்திலும் சிவபெருமானை வழிபட்டால் திருமணம் கைகூடி கணவன், மனைவி ஒற்றுமையுடன் வாழ்ந்து, குழந்தை பாக்கியம் மற்றும் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன்படி பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கீழக்கரை: கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது.
நுாறுக்கும் மேற்பட்ட சங்குகளால் சிவலிங்கம் வரையப்பட்டு சுற்றிலும் நெல்மணிகள் நிரப்பப்பட்டது. சங்குகளில் புனித நீர் நிரப்பி மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
மூலவர் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை நடந்த பூஜையில் பஜனை, நாமாவளி, ருத்ர நாம ஜெபம் சிவ நாம அர்ச்சனை உள்ளிட்டவைகள் நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ஹரிஹர சர்மா செய்திருந்தார். உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று 108 சங்காபிேஷகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.