/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவன் கோயில்களில் சோமவாரம் துவக்கம்
/
சிவன் கோயில்களில் சோமவாரம் துவக்கம்
ADDED : நவ 17, 2025 12:09 AM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷகம் நடைபெறும். கார்த்திகை சோமவாரம் சிவ வழிபாட்டுக்கு உகந்தது. சிவபெருமானுக்கான விரதங்களில் முக்கியமானது சோமவாரம். இன்று கார்த்திகை பிறப்பு அன்றே சோமவாரமும் துவங்குகிறது. (இன்று) நவ.17, 24, டிச.1,8,15, ஆகிய 5 திங்கள் அன்று சோமவாரம் கடைபிடிக்கபடுகிறது. அன்று மாலை சங்காபிேஷகம் நடைபெறும்.
இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது- சந்திரனுக்குரிய நாளான திங்கள் கிழமை இது கடைபிடிக்கபடுகிறது. கார்த்திகை மாதத்து சோமவாரம் தனிசிறப்பு பெறுகின்றன.
அன்றையதினம் சங்குகளில் நீரை நிரப்பி யாகசாலையில் வைத்து வேள்வி செய்து அந் நீரால் சிவபெருமானுக்கு அபிேஷகம் நடைபெறும்.
இந்த ஆண்டு கார்த்திகையில் 5 சோமவாரம் உள்ளது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வன்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் சங்காபிேஷம் நடைபெறும். சிவனை வழிபட துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்றனர்.

