/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு தேவை
/
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு தேவை
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு தேவை
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு தேவை
ADDED : ஜன 14, 2025 08:06 PM
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு தேவை என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.29 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய மழை பெய்ததால் கண்மாய் பாசனத்தால் ஒரளவிற்கு பயிர்கள் விளைச்சல் கண்டுள்ளன.பயிர்கள் அறுவைடை செய்யும் பணிகளை விவசாயிகள் துவக்கி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு ஊராட்சிக்கு ஒரு நெல் கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் கொள்முதல் மையங்களில் நெல் மூடைகளை எடைபோட்டு எடுக்கும் பொருட்டு அதற்கான பணியாளர்களை நுகர் பொருள் வாணிபக்கழகம் நியமிக்க வேண்டும்.
விவசாயிகளின் நெல்லை எடை போடுவதற்கான கூலியை தமிழக அரசு வழங்குகிறது. இருந்தும் விவசாயிகளிடம் கொள்முதல் மையத்தில் உள்ள பணியாளர்கள் மூடைக்கு ரூ.50 வரை வசூலிக்கின்றனர். இதனைதடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பாக்கியநாதன், வைகை விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகளை துவங்க வேண்டும். இதில் மூடைக்கு ரூ.50 வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை, நுகர் பொருள் வாணிபக்கழகம் சார்பில் கண்காணிப்பு பணிகளை செய்ய வேண்டும்.
நெல்லின் ஈரப்பதம் 18 சதவீதம் வரை இருந்தால் கொள்முதல் செய்யப்படும். இதில் ஈரப்பதம் 21 சதவீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.