/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்கால நோய்: தப்பிக்க அறிவுரை
/
மழைக்கால நோய்: தப்பிக்க அறிவுரை
ADDED : அக் 23, 2025 11:21 PM
திருவாடானை: மழைக் கால நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தொண்டி அருகே காரங்காட்டில் சுகாதாரம் குறித்த ஆய்வுப் பணிகள் நடந்தது. மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் சந்தனராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிராமங்களில் மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி உள்பட பலவித நோய்கள் மக்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே மழைக் கால நோய்களில் இருந்து தப்பிக்க வீடுகள், ஓட்டல்கள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் குடிநீரை கொதி நிலை வரை காய்ச்சி பிறகு ஆற வைத்து குடிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் ஆட்டுக்கல், டயர்கள், பிளாஸ்டிக் பைகளில் மழை நீர் தேங்கி நிற்பதை தடுப்பதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கலாம்.
சுற்றுப்புறங்களில் கழிவு நீர், குப்பை தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல் என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தனர்.

