/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவ மழையால் பசுமையான விளை நிலங்கள்: கண்மாய், ஊருணிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ADDED : நவ 07, 2024 01:46 AM

உத்தரகோசமங்கை, புத்தேந்தல், சத்திரக்குடி, சக்கரகோட்டை, அச்சுந்தன்வயல், காவனுார் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் வளர்ந்து வயல்வெளிகள் பசுமையாக காட்சியளிக்கிறது.
மாவட்டத்தில் மானாவாரியாக 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்பே வயல்களில் உழவு செய்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
நடப்பு ஆண்டில் ராமநாதபுரம், சக்கரக்கோட்டை, அச்சுந்தன்வயல், புத்தேந்தல், உத்திரகோசமங்கை, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி விதைப்பு பணிகள் முடிவடைந்து நெற்பயிர்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் வயல்வெளிகள் பசுமையாக மாறி வருகிறது.
அக்., கடைசியில் துவங்கிய பருவ மழை நன்றாக பெய்து முதல் போக சாகுபடியை தொய்வின்றி மேற்கொள்ள வசதியாக கண்மாய், ஊருணிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வளர்ந்து வரும் நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரமிடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே காவனுார், தொருவளூர், உத்தரகோசமங்கை, சத்திரக்குடி, புத்தேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வயல்வெளிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பயணிகள் அலைபேசியில் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.