/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாதந்தோறும் தாமதமாக பருப்பு, பாமாயில் சப்ளை: புலம்பும் ரேஷன் பணியாளர்கள்
/
மாதந்தோறும் தாமதமாக பருப்பு, பாமாயில் சப்ளை: புலம்பும் ரேஷன் பணியாளர்கள்
மாதந்தோறும் தாமதமாக பருப்பு, பாமாயில் சப்ளை: புலம்பும் ரேஷன் பணியாளர்கள்
மாதந்தோறும் தாமதமாக பருப்பு, பாமாயில் சப்ளை: புலம்பும் ரேஷன் பணியாளர்கள்
ADDED : அக் 17, 2024 05:15 AM
ராமநாதபுரம்: ரேஷனில் சில மாதங்களாக பருப்பு, பாமாயில் தாமதமாக வழங்கப்படுவதால் மக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை என ரேஷன்கடை விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன், ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம் பருப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இப்பொருட்கள் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. சில மாதங்களாக கொள்முதலில் ஏற்பட்ட சிக்கலால் அந்தந்த மாதத்திற்குரிய பாமாயில், துவரம்பருப்பு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர்கள் கூறியதாவது: கடந்த ஆட்சியில் 6 மாதங்களுக்கு ஒருமுறை பாமாயில், பருப்பு டெண்டர் கோரப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் தொய்வின்றி வழங்கப்பட்டது. தற்போதைய அரசு மாதந்தோறும் கொள்முதல் முறையை கொண்டு வந்ததால் சில மாதங்களாக பாமாயில், பருப்பு விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பலமுறை கடைக்கு அலையும் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை டெண்டர் கோரப்பட்டு பாமாயில், து.பருப்பு கொள்முதல் செய்கின்றனர். இதை 3 மாதங்களுக்கு ஒருமுறை என மாற்ற வேண்டும். அப்போது தான் தாமதமின்றி மாதத்தின் முதல் இருவாரங்களில் வழங்க முடியும். கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப முழு சரக்கும் அனுப்ப உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்றனர்.