ADDED : ஆக 25, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி -சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரக்கூடிய சந்திர தரிசன விழா நடந்தது. மூலவர் பூவேந்தியநாதர், பவளநிற வல்லியம்மனுக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த முன்னை மரத்திற்கு முன்பாக முன்னோர்களை நினைத்து ஏராளமானோர் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னை மரத்தை ஏராளமான பக்தர்கள் தொட்டு வணங்கி சென்றனர்.