/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துளி நீரில் அதிக பயிர் : விவசாயிகளே நுண்ணீர் பாசனம் அமைத்திடுங்கள் : ராமநாதபுரத்திற்கு ரூ.74.34 லட்சம் நிதி ஒதுக்கீடு

ADDED : ஆக 30, 2025 11:13 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நுண்ணீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ராஷ்டீரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தில் 'ஒரு துளி நீரில் அதிக பயிர்' என்ற திட்டத்தில் சிறப்பு நிதியாக ரூ.74 லட்சத்து 34 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை சார்பில் 2025-26ம் நிதியாண்டில் 311.43 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதிதிராவிடர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 'ஒரு துளி நீரில் அதிக பயிர்' என்ற திட்டத்தில் சிறப்பு நிதியாக ரூ.74 லட்சத்து 34 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிகபட்சமாக 5 எக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
ஏற்கனவே மானியத்தில் தெளிப்புநீர் பாசனம் அமைத்த விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் முறைக்கு மாற விரும்பினால் 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து அமைக்கலாம். அதற்கான மானியம் ஏற்கனவே பெற்ற மானியத்தில் இருந்து கழித்து வழங்கப்படும். அரசு மானியத்தில் ஏற்கனவே சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம் அமைத்த விவசாயிகள் 7 ஆண்டுகள் முடிந்திருந்தால் இந்த திட்டத்தின் கீழ் மீண்டும் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் ஆதார், ரேஷன் கார்டு நகல், நிலப் பட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையத்தில் MIMIS(https://tnhorticulture.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். அல்லது அருகேயுள்ள வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.----