/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் கூடுதல் தன்னர்வலர்கள் தேவை
/
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் கூடுதல் தன்னர்வலர்கள் தேவை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் கூடுதல் தன்னர்வலர்கள் தேவை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் கூடுதல் தன்னர்வலர்கள் தேவை
ADDED : ஜன 21, 2025 05:47 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 646 பேர் வசிக்கின்றனர். இதுவரை 99.82 சதவீதம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார தன்னார்வலர்கள் 265 பேரும், இடை நிலை சுகாதார செவிலியர்கள் 196 பேரும், 109 சுகாதார ஆய்வாளர்கள், 10 இயன்முறை மருத்துவர்கள், உட்பட 591 பேர் பணிபுரிகின்றனர். இதில் தன்னார்வலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் வீடு தேடி செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இதில் தொடர் சிகிச்சைக்காக 4 லட்சத்து 27 ஆயிரத்து 26 பேர் பயன் பெற்று வருகின்றனர். 2 மாதங்களுக்கான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் வீடு தேடி வழங்கப்படுகின்றன. 3 வது மாதம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களிடம் பரிசோதனை செய்து உரிய ஆலோசனை பெற்று மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை பெரும்பான்மை கிராம மக்கள் பின்பற்றுவதில்லை. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 265 பேர் பணிபுரியும் இடத்தில் 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இருக்க வேண்டும். எனவே கிராமப்புறங்களில் தொடர் சிகிச்சையில் இருப்பவர்களை கண்காணிக்க அரசு தன்னார்வலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். -

