தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து தெளிப்பு

முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து தெளிப்பு

முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து தெளிப்பு


UPDATED : அக் 17, 2026 03:26 PM

ADDED : அக் 17, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 03:26 PM ADDED : அக் 17, 2026 03:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி தெருக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. முதுகுளத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. முதுகுளத்துார் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் நேதாஜி, கருணாகர சேதுபதி முன்னிலையில் தெருக்களில் துாய்மைப் பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர். இதே போன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us