ADDED : ஆக 11, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: பெண்ணை கல்லால் அடித்து காயப்படுத்திய தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
தொண்டி சத்திரம் தெருவை சேர்ந்தவர் பாரிஷாபேகம் 40. தெற்கு தெருவை சேர்ந்தவர் செய்யதலி பாத்திமா 47. இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் செய்யது அலிபாத்திமா அவரது மகன் இஜாஷ் அகமது 27, இருவரும் சேர்ந்து கல்லால் தாக்கியும், கழுத்தை நெறித்ததில் பாரிஷாபேகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரிஷாபேகம் புகாரில் தொண்டி போலீசார் தாய், மகனை கைது செய்தனர்.