/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலையில் பொட்டிதட்டி விலக்கு ரோட்டில் பெரிய பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : நவ 05, 2024 04:59 AM

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொட்டிதட்டி விலக்கு ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி நகராட்சியை அடுத்த அரியனேந்தல் வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின் இருவழிச் சாலையாக ராமநாதபுரம் செல்லும் நிலை உள்ளது. இதில் பொட்டிதட்டி விலக்கு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுஉள்ளது.
இந்நிலையில் இந்த ரோட்டோரம் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது. இதன் வழியாக செல்லும் கிராம மக்கள் நிலை தடுமாறுகின்றனர். மேலும் நெடுஞ்சாலை ஓரம் செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன.
எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் உடனடியாக பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.