/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் திரியும் கால்நடைகளால் ஆபத்தில் வாகன ஓட்டிகள்: அதிகாரிகள் அலட்சியம்

ADDED : நவ 08, 2024 04:13 AM

ராமநாதபுரம்: நாமநாதபுரத்தில் கால்நடைகள் பகல், இரவு என எந்த நேரமும் கண்டபடி ரோட்டில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில்வீடுகளில் வளர்க்க வேண்டிய குதிரை, ஆடு, மாடுஉள்ளிட்டவைரோட்டில் திரிகின்றன. மாடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்குள் அவிழ்த்து விடுகின்றனர்.ராமேஸ்வரம் - மதுரை ரோடு பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் நகர் ரோடுகளில் பகல், இரவில் கால்நடைகள் உலா வருகின்றன.
கலெக்டர் அலுவலக வளாகம் ஆடுகள், மாடுகளின் மேய்ச்சல் இடமாகவே மாறிவிட்டது.மாடுகள் நடுரோட்டில் வரும் போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கி காயமடைகின்றன.
இவ்விஷயத்தில் நகராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை பெயரளவில் உள்ளது. உரிமையாளர்கள் எவ்வித அச்சமின்றி தொடர்ந்து கால்நடைகளை மேய்ச்சலுக்காக ரோட்டில் திரிய விடுவது வாடிக்கையாகியுள்ளது.
எனவே ரோட்டில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.