ADDED : ஆக 08, 2026 06:28 AM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை திருப்பாலைக்குடி விலக்கில் இருந்து கொத்தியார்கோட்டை, பால்குளம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையும் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் இணைப்பு சாலையாக இந்த ரோடு விளங்குவதால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கு கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
