/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டாம்புளி ரோட்டில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
கூட்டாம்புளி ரோட்டில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கூட்டாம்புளி ரோட்டில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கூட்டாம்புளி ரோட்டில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 04, 2024 05:15 AM

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் -இளையான்குடி ரோட்டில் கூட்டாம்புளி விலக்கில் இருந்து சேத்திடல் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக கூட்டாம்புளி, சாத்தமங்கலம், சீனாங்குடி, சேத்திடல், முத்துப்பட்டினம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.
மேலும் கூட்டாம்புளி ரோட்டில் முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் கூட்டாம்புளி பகுதியில் ரோட்டில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துக்களில் சிக்குகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது.
எனவே அதிகாரிகள் ரோட்டில் ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.